We The Leaders – Kanyakumariவி தி லீடர்ஸ் – கன்னியாகுமரி

Our Events · எங்கள் நிகழ்வுகள்

Environment protection · சுற்றுச்சூழல் பாதுகாப்பு 🌱

August 2026 · 23 August 2026

கடற்கரை தூய்மைப் பணி – அழைப்பு வருகின்ற Sunday மாலை 3.30 மணியளவில், கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்திற்குட்பட்ட ரஸ்தாகாடு கடற்கரையில், வீதலீடர்ஸ் அமைப்பின் சார்பாக கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. இந்தப் பணியில் ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். கலந்துகொள்ள விரும்புபவர்கள் தங்களது விவரங்களை முன்பதிவு (Register) செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Environment protection · சுற்றுச்சூழல் பாதுகாப்பு

August 2026 · 9 August 2026

We The Leaders தலைமையில் – சுத்தமான கடற்கரை, நம் பொறுப்பு சோத்தவிளை கடற்கரை தூய்மை பணி கன்னியாகுமரியிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள, 4 கிலோமீட்டர் நீளமுடைய சொத்தவிளை கடற்கரை ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகும். இந்தக் கடற்கரையில் கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், துணிக் கழிவுகள் மற்றும் பல்வேறு வகையான குப்பைகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இதனை சுத்தப்படுத்தும் நோக்கில் We The Leaders அமைப்பின் தன்னார்வலர்கள் இணைந்து 2026 ஆகஸ்ட் 9 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை கடற்கரை தூய்மை பணியை மேற்கொள்ள உள்ளனர். இந்த சமூகப் பணியில் 100 தன்னார்வலர்கள் கலந்து கொண்டு, சொத்தவிளை கடற்கரையை தூய்மையாக்கும் பணியில் ஈடுபட உள்ளனர். இயற்கையை பாதுகாப்போம்! கடற்கரையை தூய்மையாக வைத்திருப்போம்!

Environment Protection · சுற்றுச்சூழல் பாதுகாப்பு

August 2026 · 2 August 2026

கன்னியாகுமரி மாவட்ட we the leaders அமைப்பின் சார்பில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி கன்னியாகுமரி காட்சி கோபுரம்( View tower) முதல் சன்செட் பாயிண்ட் வரை உள்ள பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றி மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் நிகழ்ச்சியை துவக்கி வைக்க  we the leaders தலைமை ஒருங்கிணைப்பாளர் மக்கள் தலைவன் #அண்ணாமலை அவர்கள் பங்குபெறும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நிகழ்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த தன்னார்வலர்கள் இந்த வெப்சைட் மூலம் பதிவு செய்யலாம்

Environment Protection photosEnvironment Protection photosEnvironment Protection photosEnvironment Protection photosEnvironment Protection photos